search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசம் காப்போம் மாநாடு"

    திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறவிருந்த ‘தேசம் காப்போம்’ மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #DesamKappom #VCK
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகளின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தமிழகம் முழுவதிலிருந்து நிர்வாகிகள் கட்சி நிதி அளித்தனர்.

    அதன்பிறகு திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருச்சியில் டிசம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.



    அன்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கும், அந்த அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தமிழகத்தை காக்கவும் தி.மு.க. தலைமையிலான அணியில் விடுதலை சிறுத்தை அங்கம் வகிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் பாதிக்கப்படுவதுடன் மேலும் சில அணைகள் கட்டவும் வழி வகுக்கும்.

    எனவே அணை கட்ட அனுமதிக்க கூடாது. பா.ஜ.க. மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கர்நாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மேகதாது அணை கட்டக்கூடாது என கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் திருச்சி போராட்டத்தில் தி.மு.க. கூட்டணியை பா.ஜனதா உடைக்க பார்க்கிறது என நான் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நான் அணையை பற்றி கவலைப்படாமல் அணியை பற்றி கவலைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்கவும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை.

    தி.மு.க. அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. தொகுதி குறித்து நிர்பந்திக்க கூடாது என்று எதுவும் கூறவில்லை. எங்கள் அணி பலமாக உள்ளது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அணியில் இருந்து தங்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #DesamKappom #VCK
    திருச்செந்தூர் அருகே வி.சி. கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு குறித்த விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு குறித்த விளக்க தெருமுனை கூட்டம் நா.முத்தையாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி தலைமை தாங்கினார்.  ஒன்றிய அமைப்பாளர் சிவன் வரவேற்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன், ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன், மகளிர் அணி ஜெயதேவி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் கருத்தியல் பரப்பு அணி மாநில துணைச்செயலாளர்கள் தமிழ்க்குட்டி, தர்மராஜ் ஆகியோர் விளக்க உரை யாற்றினர். முடிவில் முகாம் செயலாளர் குமார் நன்றி கூறினார்.
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் அழைப்பு விடுத்தார். #Thirumavalavan #MKStalin
    சென்னை:

    பயங்கரவாதத்தை எதிர்த்து டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அழைப்பு விடுத்தார்.

    பின்னர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு கடிதம் அளித்தோம். அவர் பங்கேற்பதாக இசைவு அளித்திருக்கிறார். மேலும் தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளோம்.

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை விரைவில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளோம். தேசிய அளவில் ராகுல் காந்தியையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்த கட்சிகள் அனைத்தும் பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அப்போது தான் மதவாத சக்திகளை முறியடிக்க முடியும்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையிலும் தற்போது வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை மீண்டும் திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் துணை போவதாக தெரிகிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நியாயமானது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #MKStalin

    ×